செயலாளர் பிரிவில் 118 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் சில பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழங்கியுள்ளன.
மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் தேங்கியுள்ளதால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கான உதவிகள் பருத்தித்துறை பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தொண்டமானாறு வான் கதவுகள் அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.