அத்தியாவசியமாகவுள்ள 24 ஒளடதங்களைக் கொள்வனவு செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திறைசேரியிலிருந்து 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் அண்மையில் திறைசேரியின் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்தையின் பலனாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த வாரத்துக்குள் தேவையான அத்தியாவசிய ஒளடதங்களைக் கொள்வனவு செய்து அபேக்ஷா மருத்துவமனைக்கு வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.