பகுதியில் பஸ் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் சில பொலிஸாரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
வஜிர் பகுதியில் இருந்து மண்டேரா பகுதியை நோக்கிச் சென்ற பஸ் மீதே இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதி சோமாலியா எல்லைக்கு அருகில் காணப்படுகிறது.
பொலிஸார் உள்ளிட்ட பொதுமக்கள் மிகவும் மிலேச்சத்தனமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாக கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவின் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலியாவைத் தளமாகக் கொண்ட அல் ஷபாப் பயங்கரவாதக் குழு அப்பிராந்தியத்தில் தொடர்ச்சியாக தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.