அந்தவகையில் நாளை பிற்பகல் 1 மணிக்கு நாட்டின் பிரதமராக பதவியேற்கும் அவர் பிற்பகல் 3.30 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து 16 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலங்கை பிரதமராக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெரிவு செய்துள்ளார் என சர்வதேச ஊடகமான AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு இடமளித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (புதன்கிழமை) தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்தார்.
அதன் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது முடிவைப் பற்றி ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக நாளை அறிவிக்கஉள்ளார்.
இந்நிலையில் நாளை 16 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அரசின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.