அணித்தலைவர் பீற்றர் இளஞ்செழியனை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பாணை விடுத்துள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) முல்லைத்தீவு – மணற்குடியிருப்பில் அமைந்திருக்கின்ற அவருடைய வீட்டிற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் குறித்த கடிதத்தை சிங்கள மொழியில் கையளித்து சென்றுள்ளனர்.
குறித்த கடிதத்தில் சிங்கள மொழியில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்றில் வாக்குமூலம் பெறவேண்டி இருப்பதனால் பீற்றர் இளஞ்செழியனை எதிர்வரும் 08 ஆம் திகதி 09 மணிக்கு இரண்டாம் மாடிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணை தொடர்பாக பீற்றர் இளஞ்செழியனிடம் வினாவிய போது, “எங்களுடைய உரிமைகளை மறுக்கபடும் போது போராட்டத்தில் கலத்துக்கொள்ளவதையும் மாவீரர் நாள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள், நில விடுதலை போராட்டம் மற்றும்ற ஏனைய நிகழ்வுகளில் கலந்து கொள்வதையும் அதை தலைமை தாங்கி நடத்துவதையும். தடைசெய்யவே ஒருவகையான பயமுறுத்தலாக இருக்குமென நம்புகின்றேன்.
எது எப்படி இருந்தாலும் எமது உரிமைக்கா தொடர்ந்து போராடுவோம். அதே போல் நினைவு தினங்களை நாடாத்துவதும் அதில் கலந்து கொள்ளுவதையும் யாரும் தடை செய்ய முடியாது எனவும் மேற்படி விசாரணைக்கு முன்நிலையாக அஞ்சவும் இல்லை” என பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்தார்.
இதேவேளை முள்ளிவாய்க்காலில் கடந்த மே மாதம் 12ம் திகதி இடம்பெற்ற இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்பநாள் நிகழ்வுகள் தொடர்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் ஜனமேந்தன் ஆகியோருடன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு விசாரணைகளை மேற்கொண்டது.
இதன் அடிப்படையில் அவ்நிகழ்வில் கலந்துகொண்டவர் என்பதன் அடிப்படையில் பீற்றர் இளஞ்செழியன் அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது