Costa Cruises சுற்றுலா கப்பல் நிறுவனத்தின், சுற்றுலாப்பயணிகள் கப்பல் மேற்கு இந்தியா, மாலை தீவு மற்றும் கொழும்பிற்கு வரவுள்ளது.
இதில் 1,739 சுற்றுலாப்பயணிகள் பயணிக்கவுள்ளதாக Costa Cruises எனும் நிறவனம் குறிப்பிட்டுள்ளது.
அந்தவகையில் இந்நிறுவனம் தனது சுற்றுலாப்பயண கப்பல் நடவடிக்கைகளை கொழும்பிற்கும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த கப்பல் எதிர்வரும் சில வாரங்களில் சுற்றுலாப் பயணிகளைக் கொண்டதாக இலங்கைக்கு வரவுள்ளது.
எனவே இந்நிறுவனம் தொடர்ச்சியாக இலங்கையின் சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு இவ்வாறான சுற்றுலா பயணிகளுக்கான கப்பல் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.
கொழும்பிற்கு இடையில் இவ்வாறான சுற்றுலா பயணிகளைக் கொண்ட கப்பல்கள் இந்த வருடம் நவம்பர் மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடையில் 6 கப்பல்கள் வரவுள்ளன.
இதேவேளை இதில் முதலாவது கப்பல் கடந்த 5 ஆம் திகதி கொழும்பிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.