LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, November 21, 2019

சட்டவிரோதமாக சிறைவைக்கப்பட்டார் ஈழத்து நாயகி?

கடல் குதிரை திரைப்படத்தின்
நாயகியை பொலிஸார் சட்டவிரோதமாக சிறைவைத்துள்ளதாக இயக்குனர் புகழேந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,  “கடல்குதிரை என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்க திட்டமிட்டேன். இந்த திரைப்படம், தமிழ் ஈழத்தின் பெண்ணின் வாழ்க்கை தொடர்பானது என்பதால், ஈழப் பெண்ணை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டேன்.

1993-ம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியா வந்த சந்திரன் என்பவரது மகள் பிரசாந்தி.  இவர் இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்து வந்தார்.

இவரது பெற்றோர் இலங்கை அகதி என்று முறையாக தமிழக அரசிடம் பதிவு செய்துள்ளனர். முதலில் ஊரபாக்கத்திலும், பின்னர் வளசரவாக்கத்திலும் வசித்தனர்.
கடந்த ஆகஸ்டு மாதம் பிரசாந்தியும், அவரது தாயாரும் எனக்கு தொலைப்பேசி அழைப்பினை மேற்கொண்டு அவசரமாக பார்க்க வேண்டும் என்று அழுதனர்.

நான் அவர்களை மெரினா கடற்கரை, காந்திச்சிலை முன்பு சந்தித்து பேசியபோது, கியூ பிரிவு பெண் பொலிஸ் அதிகாரி தனக்கு தொலைப்பேசி அழைப்பினை மேற்கொண்டு தவறான கேள்விகளை கேட்பதாக தெரிவித்து அழுதார்.

இனிமேல் அந்த அதிகாரி போன் செய்தால், என்னிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யலாம் என்றும் ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன்.

அதன்பின்னர் அவரையும், அவரது பெற்றோரையும் காணவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, பல மாதங்களாக பிரசாந்தியையும், அவரது பெற்றோரையும் சட்டவிரோதமாக கியூ பிரிவு பொலிஸார் மர்மமான இடத்தில் அடைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7