தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த மூன்று வயது குழந்தைக்கு பெரும்பாலானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
குறித்த குழந்தைக்கு பிரார்த்தனைகள் மற்றும் இசையைப் பகிர்ந்து கொள்ள வந்த சிலர், பூக்கள், பொம்மைகள் மற்றும் ஹாலோவீன் மிட்டாய்களை ஆகியவற்றைக் கொண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
கடந்த புதன்கிழமை, சால்டர் மற்றும் சார்ள்ஸ் வீதிகளுக்கு இடையில் உள்ள பிரிட்சார்ட் அவென்யூ பகுதியில் உள்ள வீட்டில் இந்த குழந்தை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டது.
இதன்பிறகு உயிராபத்தான நிலையில், அந்தக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த குழந்தையின் மூளையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால் அக்குழந்தை இறந்துவிட்டது.
குழந்தையின் தாயும் அவரது முன்னாள் காதலனும் சண்டையிட்டபோதே, உறங்கிக்கொண்டிருந்த குறித்த குழந்தையின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.