பகுதியில் கடந்த மாதம் விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி மற்றும் ஒரு பயணியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 26ஆம் திகதி விபத்துக்குள்ளான இந்த விமானித்தில், விமானி உள்ளிட்ட மூன்று பேர் பயணித்திருந்த நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
இதில் ஒக்ரோபர் மாதம் 28ஆம் திகதி இந்த விமானத்தில் பயணித்த 49 வயதான ஒருவரின் உடலை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில், விமானி மற்றும் இன்னொரு பயணியை தேடும் பணியினை மீட்புக் குழுவினர் தீவிரமாக முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையில். இந்த விமானத்தைச் செலுத்திய 39 வயதான ஜொனதன் ஃபிரீசென் (Jonathan Friesen) என்பவரின் உடலையும், 42 வயதான பயணியொருவரின் உடலையும் மீட்புக் குழுவினர் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
அனுபவமிக்க விமானியான ஜொனதன் ஃபிரீ சென், 17 ஆண்டுகளாக 9,000 மணித்தியாலங்கள் விமானப் பறப்பு சேவையில் பணியாற்றியுள்ளார்.
கடந்த ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை காலையில், வினிப்பெக்கிலிருந்து சுமார் 280 கிலோமீட்டர் வடகிழக்கே,’de Havilland Otter’ ரக விமானம், நீர்ப் பரப்பினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.