கைத் துப்பாக்கி, வோக்கி டோக்கி மற்றும் முக்கிய ஆவணங்கள் என்பன காணமால் போயுள்ள நிலையில், இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு ரொறன்ரோ பொலிஸார், பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஸ்மித்- வெஸன் 9 மிமீ கைத்துப்பாக்கியே காணமல் போயுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார், குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கி, நாற்காலியின் பின் புறத்தில் தொங்கவிடப்பட்டிருந்த கறுப்பு பையினுள் இருந்த போதே திருடப்பட்டதாகவும், இதனுடன் இருந்த வோக்கி டோக்கி மற்றும் முக்கிய ஆவணங்களும் ஒட்டு மொத்தமாக திருடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன் கிழமை இரவு 7:30 மணியளவில் இந்த திருட்டு நடந்ததாக விசாரணையாளர்கள் நம்புகின்றனர்.
அன்று மாலை முதல் இந்த திருட்டு குறித்து பொலிஸார், விசாரணை நடத்தி வருகின்றனர், ஆனால் இப்போது பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.