கூரை மீது ஏறி இரண்டு சிறைக் கைதிகள் முன்னெடுத்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
மரணத் தண்டனை கைதியொருவருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2005ஆம் ஆண்டு ராஜகிரிய றோயல் பார்க் வீடமைப்பு தொகுதியில் வசித்த சுவீடனைச் சேர்ந்த 19 வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டில் மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டிருந்த குற்றவாளி ஒருவரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.