அனைவரும் கூலிப் படையினர் என நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
வெலிமட பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அண்மையில் அமெரிக்க மிலேனியம் ஒப்பந்தத்தை எதிர்த்து ஒரு அறிக்கையை மங்கள சமரவீர வெளியிட்டார்.
இதற்கு மங்கள சமரவீர, தலைமை துறவிகள் அனைவரும் கூலிப்படை என விமர்சித்திருந்தார். இவ்வாறு அவரது கண்ணுக்கு துறவிகள் அனைவரும் கூலிப் படைகளாகவே தெரிகின்றனர்.
மேலும் இலங்கை சிங்கள மற்றும் பௌத்த நாடு இல்லையெனவும் அவர் கூறியுள்ளார். இந்த அரசாங்கம் தான் நமது பூர்வீக கலாசாரம் மற்றும் மதிப்புகள் அனைத்தையும் நசுக்கியுள்ளது.
வெளிநாடுகளில் காணப்படும் ஓரினச் சேர்க்கையை கூட இந்த நாட்டில் கொண்டுவருவதற்கு முனைந்தனர். எனவே, நாட்டை சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது.
ஆகையால் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் இவைகள் அனைத்தையும் கருத்திற்கொண்டு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.