விவகாரத்தில் உண்மையை பார்த்து பா.ஜ.க. அரசு பயப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளார்.
ஆண்டுதோறும் வெளியிடப்பட்டுவரும் தேசிய குற்றப்பதிவு பணியக அறிக்கையில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அந்த அறிக்கையில் முதன்முறையாக, மாநில வாரியாக விவசாயிகள் தற்கொலை குறித்த புள்ளிவிபரம் குறிப்பிடப்படவில்லை.
இது தொடர்பாக மத்திய அரசை கடுமையாய விமர்சித்து பிரியங்கா ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், உண்மையை பார்த்து பா.ஜ.க அரசு ஏன் பயப்படுகிறது? என கேள்வியெழுப்பியுள்ளார். பா.ஜ.க. அரசின் ஆட்சியில் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர் என்றும் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதில், விவசாயிகள் தற்கொலைகளை மூடி மறைப்பதிலேயே பா.ஜ., அரசு கவனமாக உள்ளதென குற்றம் சுமத்தியுள்ளார்.
விவசாயிகளுக்கு உரிய விலையை தர வேண்டும் என்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அவர்களை மதிக்க வேண்டும் என்றும் விவசாயிகளை நாதியற்றவர்களாக மாற்றி விடாமல், பலப்படுத்துங்கள் என பிரியங்கா ருவிற்றரில் கோரிக்கை விடுத்துள்ளார்.