சிறந்த நாடுகளின் பட்டியலில் நான்காவது நாடாக இலங்கை தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
Conde Nast Traveler எனும் சஞ்சிகையின் 32 ஆவது விருது வழங்கும் விழாவில், இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
உலகம் முழுவதுமுள்ள 6 இலட்சம் வாக்காளர்கள், உலகின் சிறந்த நாடுகள், ஹோட்டல்கள், நகரங்கள் மற்றும் தீவுகள் குறித்து கருத்துக்களைப் பெற்று, Conde Nast Traveler இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதனால் இலங்கைக்கு 91.69 புள்ளிகள் கிடைத்துள்ளன.
2019 சுற்றுலாப் பயணத்திற்கு மிக தகுதியான 10 நாடுகளில் தென் ஆபிரிக்கா, பெரு, கிறீஸ், பிலிப்பைன்ஸ், இத்தாலி மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் உள்ளடங்குகின்றன.
ஏப்ரல் மாதத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் இருந்தபோதிலும், இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் எழுச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.