செலுத்தினாலே போதுமானதென உள்ளூராட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எஸ்.பி.வேலுமணி மேலும் கூறியுள்ளதாவது, “உள்ளூராட்சி அமைப்புகளில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைப்பது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவில் நகராட்சி நிர்வாக ஆணையர், பேரூராட்சி இயக்குநர், மாநகராட்சி ஆணையர் இடம்பெற்றுள்ளனர்.
குழுவின் பரிசீலனை முடியும் வரை 2018 ஏப்ரல் 1ஆம் திகதிக்கு முந்தைய சொத்து வரியே வசூலிக்கப்படும். கூடுதலாக செலுத்தப்பட்ட சொத்துவரி வரும் ஆண்டுகளில் ஈடுசெய்யப்படும்.
உள்ளூராட்சிகளில் சொத்துவரி குறைக்கப்பட்டதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் தொடர்பில்லை.
1998க்கு பின்னர் மாநகராட்சிகள், நகராட்சிகளில் சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்படவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.