LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, November 12, 2019

ஜப்பானியப் பேரரசரின் ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்!

ஜப்பானியப் பேரரசர் நருஹிட்டோவும்,
பேரரசி மசாக்கோவு-உம், கலந்துகொண்ட சிறப்பு வாகன பேரணியை காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.

பேரரசர் நருஹிட்டோ கடந்த மாதம் அரியணை ஏறியதைக் கொண்டாடும் விதமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அந்த அணிவகுப்பு இடம்பெற்றது.

ஜப்பான் தலைநகர் ரோக்கியோவின் மத்திய பகுதியிலுள்ள அரண்மனையிலிருந்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் அணிவகுப்பு ஆரம்பித்தது.

சுமார் அரை மணி நேரம் நீடித்த குறித்த அணிவகுப்பு 4.5 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்தமை குறிப்பிடத்தக்கது. 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் அத்தகைய சிறப்பு வாகன ஊர்வலத்தில் பங்கேற்றிருந்தனர்.

இதற்கு முன்னர் 1993 ஆம் ஆண்டு அவர்களது திருமணத்தின் போது அப்போதைய பட்டத்து இளவரசர், இளவரசி என்ற முறையில் அவர்கள் சிறப்பு வாகன அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.

கடந்த மாதம் நடைபெற வேண்டிய இந்தச் சிறப்பு அணிவகுப்பு ஹகிபிஸ் சூறாவளியால் ஒத்திவைக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7