ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தெற்கு சூடானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக சுமார் 4 இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைப்பட்டுள்ளனர்.
அத்துடன், அதிகளவான வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன், மீட்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று Pibor நகரில் உயிரிழந்த கால்நடைகள் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.