ஆதரவு தொடர்பாக தமிழரசுக் கட்சி தனித்து எடுத்த முடிவை ஏற்றுகொள்ள முடியாது என ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாளை தமது முடிவை அறிவிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நேற்று பிரதமல் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என எதிர்பார்கின்றேன்.
இந்த ஜனாதிபதி தேர்தலில் என்ன முடிவு எடுப்பதென்பதை பல்கலைகழக மாணவர்கள் அவர்களுடைய திறமைகளின் அடிப்படையில் பிரதான ஐந்து கட்சிகளையும் ஒன்றாக சேர்த்திருக்கின்றார்கள்.
அந்த வகையிலே குறித்த ஐந்து கட்சிகளும் ஒன்றாக ஒரு கருத்தை வெளியிட்டால் எழுச்சியானதாகவும் மக்கள் தங்களுடைய வாக்குகளை மகிழ்ச்சியாக போடுகின்ற நிலைமையும் இருக்குமென்று நாங்கள் எதிர்பார்த்தோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருகின்ற ஏனைய கட்சிகளோடு இணைந்து தமிழரசுக் கட்சி அறிவிப்பை விடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நாங்களும் கட்சியில் பல தீர்மானங்களை எடுத்திருகின்றோம்.
இந்நிலையிலே, நாளை எங்களுடைய கட்சியின் முடிவை அறிவிக்க இருக்கின்றோம். என்னைப் பொறுத்தமட்டிலே தமிழரசுக் கட்சியின் தனித்த முடிவு கவலையளிக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தெரிவித்தார்.