தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை இடம்பெறவுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமாக 81 தொகுதிகள் காணப்படுகின்ற நிலையில், அங்கு 5 கட்டமாக வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன.
இதன்படி நாளை (சனிக்கிழமை) முதற்கட்டமாக 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
அனைத்து வாக்குகளும் டிசம்பர் 23ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தேர்தலில் பா.ஜ.க 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
இதன்காரணமாக குறித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.