இடையே நடந்து வரும் வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கப் பொருட்கள் மீதான புதிய வரிவிதிப்புகளை படிப்படியாக குறைக்க சீனா அமெரிக்காவுடன் உடன்பட்டுள்ளதாக சீன வர்த்தக அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் என்ற ஒன்று எட்டப்பட்டால் அதில் முக்கியமாக பரஸ்பர வரிவிதிப்புகளைக் குறைப்பது பிரதான அங்கமாகும். அப்போதுதான் முதற்கட்ட வாணிப ஒப்பந்தமே சாத்தியம் என்று சீன வர்த்தக அமைச்சக செய்தித் தொடர்பாளர் காவோ ஃபெங் தெரிவித்தார்.
ஆனால் கட்டணக் குறைப்புக்கான காலங்கள் எதையும் சீனா தெரிவிக்கவில்லை. முதற்கட்டமாக இரு நாடுகளும் பரஸ்பர கூடுதல் கட்டண விதிப்புகளை அகற்றுவதற்கான ஒப்பந்தம் இந்த மாதம் பெயர் குறிப்பிடாத இடத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபித ஷி ஜின்பிங்கிற்கும் இடையே நடைபெறும் என இருதரப்புக்கும் நெருக்கமான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமெரிக்கா – சீனா இடையே இடைக்கால ஒப்பந்தம் வரும் டிசம்பர் 15ஆம் திகதி கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் அமெரிக்காவும் சீன கணினிகள், மடிக்கணினிகள், கைப்பேசிகன் மற்றும் பொம்மைகள் மீதான சுமார் ரூ.150 பில்லியன் டொலர் கட்டணங்களை இரத்துச் செய்வதாக உறுதியளித்துள்ளது.
அத்துடன், டிசம்பர் 3-4 திகதிகளில் நேட்டோ மாநாட்டில் ட்ரம்ப் கலந்துகொள்ள வரும்போது இரு தலைவர்களும் இந்த முதற்கட்ட ஒப்பந்தத்தை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.