கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றுள்ளார்.
ISSF உலகக் கோப்பைப் போட்டி சீனாவின் புற்றியனில் நவம்பர் 17இல் தொடங்கி நவம்பர் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இறுதிச்சுற்றில் 10 மீற்றர் எயார் ரைபிள் பிரிவில் 250.8 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் தமிழ்ப் பெண்ணான இளவேனில்.
அதேபோல மனு பாக்கர், 10 மீற்றர் எயார் பிஸ்ரல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். அவர் 244.7 புள்ளிகள் பெற்று இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார்.