கொடூரமான தடைகள் இருந்தபோதிலும், ஈரானிய எண்ணெய் தொழிலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் மாபெரும் எண்ணெய் வயலைக் கண்டுபிடித்துள்ளனர் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.
இது ஈரான் அரசு மக்களுக்கு அளிக்கும் பரிசு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மிகப்பெரிய புதிய எண்ணெய் வயலைக் கண்டுபிடித்தது என்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை இது உயர்த்தும் என்றும் அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நம்பிக்கை வெளியிட்டார்.
ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி ஆற்றிய உரையை அந்நாட்டு அரச தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதன்போது மத்திய பாலைவன நகரமான யாஸ்டில் இருந்து அவர் பேசுகையில்,
“அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதோடு, ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்தார். இதனால் ஈரான் தனது எண்ணெயை விற்கப் போராடியது.
மே மாதத்தில், ஈரானிய எண்ணெய் வாங்கும் எட்டு முக்கிய நபர்களுக்கு தற்காலிக பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தள்ளுபடி செய்தது.
ஏனைய கொள்வனவாளர்களை கண்டுபிடிப்பதற்காக சீனா, இந்தியா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளின் மீதான அழுத்தத்தை அதிகரித்தது.
அமெரிக்கத் தடையை மீறி பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானுக்கு உதவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
எனினும் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளால் ஈரான் இந்த ஆண்டு ஒரு கடுமையான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதனால் எங்கள் மக்கள் கடந்த ஆண்டில் கடினமான நாட்களை எதிர்கொண்டனர். அமெரிக்கா மீதான நம்பகத்தன்மையை நாங்கள் இழந்துவிட்டோம்.
நாங்கள் ஒரு பணக்கார நாடு என்று இன்று அமெரிக்காவுக்கு அறிவிக்கிறோம். எங்கள் நாடு மிகப்பெரிய புதிய எண்ணெய் வயலை குஜெஸ்தான் மாகாணத்தில் கண்டுபிடித்துள்ளது. இந்த எண்ணெய் வயலில் 150 பில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது.
ஈரானிய எண்ணெய் தொழிலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் இந்த மாபெரும் எண்ணெய் வயலைக் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் நாட்டின் பொருளாதாரத்தை இந்த எண்ணெய் வயல் உயர்த்தும். இது மக்களுக்கு ஈரான் அரசு அளிக்கும் பரிசு” என ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.