பாதுகாக்க வேண்டுமானால் சஜித் பிரேமதாசவே ஒரே தெரிவு என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்குப் போட்டால் எம்மையும் போட்டுத் தள்ளுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா, திருநாவற்குளத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “வாக்களித்த மக்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர வேண்டும் என்ற தெளிவான ஒரு நிலைப்பாட்டை கொண்டவர் தான் சஜித் பிரேமதாச.
எமது பகுதிகள் அபிவிருத்தி அடையாத நிலையில் உள்ளன. எமது படித்த இளைஞர் யுவதிகளுக்கு ஒழுங்கான வேலை வாய்ப்பு இல்லை. சுய தொழில் செய்வதற்கு மூலதனம் இல்லை. அனைத்துமே இல்லாத நிலை தான் இங்கு இருக்கிறது. அதனை மாற்றுவதற்காகத் தான் எமது ஆட்சியைக் கொண்டுவர இருக்கிறோம்.
இந்த நாட்டிலே இன,மதவாதம் இருக்க முடியாது. நாம் அனைவரும் நண்பர்கள். ஒரு தாய் பிள்ளைகளாக வாழ வேண்டும். பெரும்பாண்மை மக்களுக்கு கைகட்டி அடிமை சேவகம் செய்து தான் சிறுபான்மை மக்கள் வாழவேண்டும் என்றால் அந்த ஜக்கியம் மனோ கணேசனுக்கு தேவையற்றது.அனைத்து மக்களும் சமமாக வாழவேண்டும். அதுவே உண்மையான சமத்துவம்.
அரசாங்கத்தை உருவாக்கி விட்டு வெறுமனே நாம் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்காமட்டோம்.
தமிழ் வேட்பாளர்களிற்கு வாக்களிப்பது, தேர்தலை பகிஸ்கரிப்பது, மக்கள் விடுதலை முண்ணனிக்கு வாக்களிப்பது என்பது கோட்டபாயவை ஆதரிப்பதாகவே அமையும்,கோட்டாவிற்கு போட்டால் எம்மை போட்டு தள்ளுவார்.வெள்ளை வான் வரும்.கடத்தல் காணாமல் போதல்கள் வரும். எனவே ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றால் சஜித்திற்கு வாக்களியுங்கள். எதிர்வரும் 16 ஆம் திகதி வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று அந்த கணேசனையும் நினைத்துக்கொண்டு, இந்த கணேசனையும் மனதில் வைத்து வாக்களியுங்கள் என்றார்.