LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, November 21, 2019

நீச்சல் உடையில் வருபவர்களுக்கு பெற்றோல் இலவசம் – அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்!

ர‌ஷ்யாவில் பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றின்
வித்தியாசமான விளம்பரத்தால் 3 மணித்தியாலங்கள் அந்த நிலையம் அமைந்திருந்த பகுதியே பரபரப்படைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மத்திய ரஷ்யாவின் சமாரா நகரில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்று மேற்கொண்ட இந்த அதிரடி விளம்பரத்தால் எதிர்ப்பார்த்ததை விட மாறுபட்ட விடயமே இடம்பெற்றுள்ளது.

நீச்சல் உடையில் வரும் அனைவருக்கும் இலவசமாக பெற்றோல் வழங்கப்படும் என்ற வினோத சலுகை ஒன்றை பெற்றோல் நிலையம் அறிவித்து விளம்பரப்படுத்தியுள்ளது.

குறித்த பெற்றோல் நிலையத்தை மக்களிடம் பிரபலப்படுத்துவதற்காக அதன் உரிமையாளர் வினோத சலுகை ஒன்றை அறிவித்து விளம்பரப்படுத்தினார்.

அதன்படி, பெற்றோல் நிலையம் திறந்த பிறகு முதல் 3 மணி நேரத்துக்குள் நீச்சல் உடையில் வரும் அனைவருக்கும் இலவசமாக பெற்றோல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பெண்கள் நீச்சல் உடையில் வந்து இலவச பெற்றோலை பெற்று செல்வார்கள் என்றும் இதன் மூலம் அந்த நிரப்பு நிலையம் கவர்ச்சிகரமான இடமாக மாறி மக்களிடம் பிரபலமாகிவிடும் என உரிமையாளர் எதிர்பார்த்தார்.

ஆனால் நடந்தது வேறு. இலவச பெற்றோல் குறித்த விளம்பரம் வெளியானதும் ஏராளமான ஆண்கள் நீச்சல் உடையை அணிந்து கொண்டு அந்த வரிசையில் காத்து நிற்க ஆரம்பித்து விட்டனர்.

நீச்சல் உடை அணிந்து வர வேண்டியவர்கள் ஆண்களா, பெண்களா என விளம்பரத்தில் குறிப்பிடாததால் பெற்றோல் நிலையத்தில் பெண்களை விட ஆண்களின் கூட்டம் அலை மோதியது.

இதனால் பெற்றோல் நிலைய ஊழியர்கள் திணறிப்போனார்கள். சலுகைக்கான கால அவகாசம் முடிந்த பின்னரே அவர்கள் நிம்மதியடைந்தனர்.

இதற்கிடையே ஆண்கள் நீச்சல் உடையில் வந்து வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்பி சென்ற ஔிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7