ஏற்பட்ட மோதலில், வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து வழக்கறிஞர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்களே இவ்வாறு நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் டெல்லியில் அமைந்துள்ள தீஸ் ஹசாரி, கார்கர்டோமா, சாகேத், துவாரகா, ரோஹினி, பட்டியாலா ஹவுஸ் ஆகிய ஆறு மாவட்ட நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், பொலிஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக மாறியதில், 10க்கும் மேற்பட்ட பொலிஸார் மற்றும் வழக்கறிஞர்கள் காயமடைந்தனர்.
அத்தோடு, பொலிஸ் வாகனம் தீக்கிரையாக்கப்பட்டதுடன், பல வாகனங்கள் சேதமடைந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து டில்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.