வழங்கப்பட்டு வந்த ‘சுரக்ஷ’ காப்புறுதித் திட்டம், தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அதனை எக்காரணம் கொண்டும் நிறுத்தப் போவதில்லை எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
தனது அமைச்சில் இன்று (வெள்ளிக்கிழமை) கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் 2020 ஆம் ஆண்டின் பாடசாலையின் முதலாவது தவணைக்காலம் தொடங்கி இரண்டு வாரத்துக்குள், மாணவர்களுக்கான சீருடைக்குரிய வவுச்சர்கள் விநியோகிக்கப்படும் என்றும் கூறினார்.
இதேவேளை ‘சுரக்ஷ’ காப்புறுதித் திட்டத்தினால் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைகின்றனர் என்றும் எனவே, இந்த முக்கிய திட்டம் எந்தவிதமான முறைகேடுகளும் இல்லாமல் செயற்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அந்தவகையில் குறித்த திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி திட்டத்தை தொடர அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்றும் அவர் கூறினார்