LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, November 7, 2019

வீடற்ற மக்களுக்கு தங்குமிட மையம் திறப்பு!

ரொறன்ரோ நகரம் முதல் பருவ
பனிப்பொழிவுக்கு தயாராகி வருகின்ற நிலையில், வீடற்ற மக்களுக்கான புதிய குளிர்கால சேவை திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2019-2020 திட்டத்தில் வீடற்ற அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோருக்காக ஒரு புதிய தங்குமிட மையம் திறக்கப்படவுள்ளது.

யோங் ஸ்ட்ரீட் மற்றும் பிஞ்ச் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள பல வசதிகளை உள்ளடக்கிய இந்த மையம், எதிர்வரும் 12ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

ஹோம்ஸ் ஃபர்ஸ்ட் சொசைட்டியால் இயக்கப்படும் இந்த மையம், 200 பெரியவர்களுக்கு இடமளிக்கும் மற்றும் சமூக முகவர், நகரத்தின் புதுமுக அலுவலகம் மற்றும் தற்போதுள்ள நகரப் பிரிவுகளுடன் கூட்டாண்மை மூலம் ஒரே இரவில் தங்குமிடம் மற்றும் சிறப்பு சேவைகளை வழங்கும்.

இந்த மையத்தை திறப்பதன் மூலம் 200 படுக்கைகள் வீடற்ற மக்களுக்கு பயன் தரும் வகையில் அமையும் என கூறப்படுகின்றது.

இந்த குளிர்காலத்தில் ரொறாண்ரோவில் வீடற்ற மக்களுக்கான ஆறு புதிய சேவைகளில் இந்த தளம் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7