LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, November 13, 2019

நல்லூரில் சஜித்துக்கு ஆதரவான கூட்டம் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

புதிய ஜனநாயக முன்னணியின்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாவிற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பிரசாரக் கூட்டம் யாழில் இடம்பெற்றது.

யாழ். நல்லூரிலுள்ள கிட்டுப் பூங்காவில் இந்த கூட்டம் இன்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற நிலையில், இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை உடனடியாக அங்கிருந்து வெளியேறக் கோரியும், தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கக் கோரியும் வவுனியாவிலிருந்து சென்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.

மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்கச் சொல்லாதே”, “போர்க் குற்றவாளிகளைப் பாதுகாக்காதே”, “இனத்தை விற்று அரசியல் செய்யாதே!”, “இலஞ்சம் வாங்கி வாக்களிக்கச் சொல்லாதே”, “பெளத்தத்துக்கு முன்னுரிமை வழங்க இணக்கம் வெளியிட்டவர்களே வெளியேறு”, “தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்போம்” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியும், பல பதாதைகளை தாங்கியும் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, சஜித் பிரேமதாசரை ஆதரித்த கூட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7