அனுமதிக்கப்பட்ட 18 வயதான பாடசாலை மாணவி குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.
குறித்த மாணவி, வைத்தியசாலையில் கழிவறைக்குள் குழந்தையை பெற்றெடுத்து ஜன்னல் வழியாக வெளியில் வீசியெறிந்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவம் நிட்டம்புவ, வத்துபிடிவால ஆதார வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
கா.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்கும் இந்த மாணவியை வயிற்று வலியென குறிப்பிட்டு அவரது தாயாரும், பாட்டியும் வத்துபிடிவால ஆதார வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை அனுமதித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே வைத்தியசாலையின் கழிவறைக்குள் சென்று மாணவி குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த சமயத்தில் தாயாரும், பாட்டியும் கழிப்பறை வாசலில் காத்திருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குழந்தையை பெற்றெடுத்ததும், கழிப்பறை ஜன்னல் வழியாக குழந்தையை வெளியே வீசியுள்ளார். கழிப்பறைக்கு வெளியிலிருந்த சீமெந்து தரையில் குழந்தை விழுந்துள்ளது.
பின்னர் அந்த பகுதிக்கு வந்த துப்பரவு தொழிலாளர்கள் குழந்தையை கண்டு தாதியர்களுக்கு தெரிவித்தனர். உடனடியாக குழந்தை அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குழந்தையை பிரசவிப்பதற்கு முதல்நாள் வரை மாணவி பாடசாலைக்கு சென்று வந்தமை தெரியவந்துள்ளது. எனினும், உடல் பிரச்சினையெனக் கூறி அவர் பாடசாலை சீருடையை அணியாமல் பிறிதொரு ஆடையையே அணிந்து சென்றுள்ளார்.
மாணவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வெயாங்கொடவைச் சேர்ந்த 18 வயதான பாடசாலை மாணவனே கர்ப்பத்திற்கு காரணமென தெரிய வந்துள்ளது. இந்நிலையில் குறித்த மாணவியும், மாணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றத்தில் இருவரும் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.