வழிபாட்டிடங்களின் அறிவிப்பு பலகையில் சிங்கள மொழி இடம்பெற்றுள்ளது.
இந்தியாவிலுள்ள சாஞ்சி பௌத்த தலத்திலுள்ள பெயர்ப்பலகைகளில் சிங்கள மொழி இடம்பெற்றுள்ளது.
அண்மையில் சாஞ்சி மடத்தை பார்வையிட்ட இந்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல், இந்தியாவின் தொல்பொருள் அதிகாரிகளுக்கு வழங்கிய ஆலோசனையின்படி புதிய பெயர்ப்பலகைகள் இடப்பட்டுள்ளன.
சிங்கள பெயர்ச்சொற்களின் திறப்பு வார இறுதி நிகழ்வு அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் முன்னிலையில் நடைபெற்றது.
இதன்போது இந்தியாவிலுள்ள அனைத்து புத்த வழிபாட்டிடங்களின் அறிவிப்பு பலகைகளிலும் சிங்கள மொழி இடம்பெறுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமும் இந்தியாவின் புத்த வழிபாட்டிடங்கள், மடங்கள் ஆகியவற்றில் ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே பெயர்ப்பலகைகள் இருந்தன. தற்போது சாஞ்சி பௌத்த தலத்தில் முதன்முறையாக அனைத்து பெயர்ப்பலகைகளிலும் சிங்களம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது