ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதை அடுத்து நாடு முழுவதும் அவரின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவான மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியிலும் இடம்பெற்றன.
கிளிநொச்சி பொது சந்தைக்கு முன்பாக பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து இன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, பட்டாசுகள் வெடிக்க வைக்கப்பட்டதுடன் பொங்கலும் இடம்பெற்றது. அத்துடள் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கேக் வெட்டப்பட்டு மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.