கனடா தெளிவான பார்வையை (clear eyed) கொண்டிருக்க வேண்டும் என கனடாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரிச்சார்ட் ஃபடென் தெரிவித்துள்ளார்.
குறித்த இரு நாடுகளும் ஏற்படுத்தும் அபாயங்கள் நிச்சயமாக வேறுபட்டவை எனவும் அவை பொதுவாக அந்நாடுகளின் நலன் சார்ந்தவையாகவும் மேற்கு நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் அமைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது முன்னோடியான ஸ்டீபன் ஹார்ப்பர் ஆகியோரின் பாதுகாப்பு சங்கங்கள் நிறுவனத்தின் மாநாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த தசாப்தத்தில் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில் உலகம் மாறிவிட்ட விதம் குறித்து கனடா தெளிவான பார்வையுடன் இருக்க வேண்டும் எனவும் ஃபடென் கூறியுள்ளார்.
கனடா, தமது எதிரிகளை அடையாளம் காணவேண்டும் எனவும் அவர்களை சமாளிக்க தெளிவான வரம்புகளை வரைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பழைய பனிப்போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கு அமெரிக்க தலைமையுடன் போய்விட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.