வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள சூறாவளி காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 11ஆம் திகதி வரை வங்காள விரிகுடாவிற்கு கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சூறாவளி எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் அதிக வலுவான சூறாவளியாக மாறி வடக்கு நோக்கி வடமேல் திசையூடாக பங்களாதேஷ் கரையை அண்மிக்கவுள்ளது.
இதன் காரணமாக இந்த கடற்பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது