அதிகரித்தமைக்கான காரணத்தை அறிந்துக்கொள்ளும் நோக்கில் உலக சுகாதார நிறுவனத்தின் உதவியை கோரியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேற்படி தூசுத் துகள்கள் எவ்வாறு நாட்டுக்குள் வந்துள்ளது என்பதை கண்டறியுமாறு வானிலை ஆராய்ச்சி மையம் தம்மிடம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளதாக குறித்த அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் கே.எச்.முத்குட ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
எனவே இது குறித்து தாம் உலக சுகாதார நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, உலக சுகாதார நிறுவனம் இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து தமக்கு அறிக்கையொன்றை கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே தமக்கு விரைவில் இதற்கான காரணம் தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு நகருக்கு மேல் வளிமண்டலத்தில் உள்ள தூசுத் துகள்களின் எண்ணிக்கை நூற்றுக்கு நூறு சதவீதத்தை விடவும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.