மோதிக்கொண்ட விபத்துக் குறித்து, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரவுன்ஷிப் வீதி 510இற்க்கு அருகில் நெடுஞ்சாலை 17இல் இந்த விபத்து நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் எத்தனை வாகனங்கள் தொடர்புபட்டுள்ளன, எத்தனை பேருக்குக் காயம் என்பது குறித்து இதுவரை எவ்விதத் தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் இந்த விபத்துக் குறித்து பொலிஸார், தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். அத்தோடு பொலிஸார் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.
லொயிட்மின்ஸ்ரர், சஸ்கரூனுக்கு வடமேற்கே 255 கிலோமீட்டர் தொலைவில், சஸ்காச்சுவன்- அல்பேர்ட்டா எல்லையில் உள்ளது.
ஏற்கனவே இப்பகுதியில் பனிப் பொழிவு அதிகமாக இருப்பதால், வாகனச் சாரதிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.