தீவிரவாத தாக்குதலில் 53 இராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், அந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளது.
மாலியின் Menaka பிராந்தியத்தில், இன்தெலிமான் என்ற பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சோதனை சாவடியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
துப்பாக்கியால் சுட்டும் குண்டுகளை வீசியும் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர்.
இதை தொடர்ந்து நேற்று மேற்கொள்ளப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு தாக்குதலில் இராணுவ வாகனம் ஒன்று சேதமடைந்தது.
இதில், பிரான்ஸ் இராணுவ வீரர் உயிரிழந்தார். இந்தநிலையிலேயே குறித்த தீவிரவாத தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளது.