பிரேமதாசவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதற்கு உடன்பட்ட நிலையில் தேர்தல் பிராசாரத்திற்காக இரண்டு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு கிழக்கில் தேர்தல் பிரசாரத்தினை மேற்கொள்ளும் முகமாகவே குறித்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த நிதி சமமாக பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தத்தமது மாவட்டத்தில் பிரசாரத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த நிதி கொழும்பில் வைத்து வழங்கப்பட்டதாகவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.