மற்றும் சிரிய படைகள் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரஸ் அல் அய் நகருக்கு அருகே உள்ள உம் ஷைபா கிராமத்தில் இன்று (சனிக்கிழமை) துருக்கி மற்றும் சிரிய படைகள் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருவதாக சிரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
இரு தரப்பும் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் இதில் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு சிரியாவில் தொடர்ந்து நடக்கும் வன்முறைகள் கவலை அளிப்பதாக ஐ.நா.சபை தெரிவித்த நிலையில் மீண்டும் இரு நாட்டுப் படைகளும் மோதலில் ஈடுபட்டுள்ளன.
சிரியாவில் கடந்த சில வாரங்களாக நடக்கும் வன்முறை காரணமாக 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
முன்னதாக, சிரியாவில் குர்திஷ் படைகளுக்கு எதிராக துருக்கி இராணுவத்தின் தாக்குதலைத் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து குர்திஷ் படையினர் பின்வாங்கியுள்ளனர்.
இந்நிலையில் துருக்கி – சிரியா எல்லையில் இரு நாட்டுப் படைகளும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.