வடக்கு முஸ்லிம்களின் நலனுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் புத்தளம்- கொழும்பு பிரதான வீதியின் ரத்மல்யாயப் பகுதியில் குறித்த போராட்டம் இன்று நடத்தப்பட்டுள்ளது.
வட.மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 29 வருடங்களின் பூர்த்தியை முன்னிட்டு, ஜூம் ஆத் தொழுகையின் பின்னர் குறித்த போராட்டத்தை அவ்வமைப்பு நடத்தியிருந்தது.
இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு, சுலோகங்களை ஏந்தியவாறு பல்வேறு கோஷங்களை எழும்பி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.