பதவியை ராஜினாமாச் செய்துள்ள நிலையில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை அழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சிக்குள் எதிர்க்கட்சி தலைவருக்கான போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் அப்பதவிக்கு சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
இதேவேளை 16 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் எனவும் அதில் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் அடங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.