காலத்தில் மலையகத் தமிழர்கள் விடுதலைப் புலிகளாகவே பார்க்கப்பட்டனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் மலையகத்தில் வாழுகின்ற மக்கள் இன்று மிக முக்கியா இந்த நாட்டின் பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தேர்தல் பிரசார கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தலவாக்கலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “மலையகத்தில் வாழுகின்ற மக்கள் இன்று மிக முக்கிய இடமொன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்டின் பிரஜைகளாக அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அவர்களை விடுதலைப் புலிகளாகவே பார்த்தனர்.
அது மட்டுமல்லாது நகரங்களிலிருந்து வெளியேற விடவில்லை. கொழும்புக்கு வர விட வில்லை. தொழில் புரிய விடவில்லை. சிலர் மாயமானார்கள். இன்னும் சிலர் வெள்ளை வேனில் கொண்டு செல்லப்பட்டார்கள். இன்று அவை ஒன்றுமில்லை. எவரும் காணாமல் போவதுமில்லை. கொழும்புக்கு சென்று வேலை செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளை இல்லை அதற்கு பதிலாக சுவசரிய வேன் மாத்திரமே உள்ளது.
இன்று அமைச்சர் திகாம்பரம் உங்களுக்கு கௌரவத்தினை ஏற்படுத்தியுள்ளார். நீங்கள் தோட்டத் தொழிலார்கள் அல்ல. மலையகத்தில் வாழுகின்ற தமிழ் மக்கள் என்ற நாமத்தினை ஏற்படுத்தியுள்ளார்.
முன்பெல்லாமம் தோட்டம் தோட்டம் என்று தான் சொன்னார்கள். ஆனால் நீங்கள் தோட்டப் பிரஜைகள் அல்ல. நீங்கள் இலங்கை பிரஜைகள். நீங்கள் நாட்டில் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம். நாம் அனைவரும் இலங்கையர்கள் என கூற விரும்புகிறேன்.
கோட்டபாய ராஜபக்ஷ இந்த பகுதிக்கு என்ன செய்யப்போகிறார் என்று கேட்க விரும்புகிறேன். மலையக மக்கள் என்று சொல்ல முடிவில்லை. அவர் தோட்ட மக்கள் என்றே சுட்டிக்காட்டியிருக்கிறார். அது மாத்திரமன்றி மலையக பகுதிகளில் மல்லிகைப் பூவினை உற்பத்தி செய்து அந்நியச் செலவாணியினை பெற்றுத்தர போவதாக தெரிவித்துள்ளார்கள்
இது மாத்திரமன்றி நாங்கள் உருவாக்கிய கணித விஞ்ஞான பாடசாலைகளை மீண்டும் உருவாக்குவதாக தெரிவித்துள்ளார்கள். எமது நோக்கம் தொழில் துறையினை ஊக்குவித்து நவீக தொழிநுட்ப கல்வியை விருத்தி செய்து இந்த மலையக பகுதிகளில் அதிகமான வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதே ஆகும்.
எனவே இதனை செய்வதற்கு நீங்கள் அன்னத்தின் முன்னால் புள்ளடி இட்டு சஜித் பிரேமதாசவை வெற்றிப்பெறச் செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்தார்