SR-71 Blackbird விமானத்தை மீண்டும் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1950ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவுடனான பனிப்போரின் போது SR-71 Blackbird என்ற விமானத்தை அமெரிக்கா தயாரித்தது.
குறித்த விமானம் இதுவரை தயாரிக்கப்பட்ட விமானங்களிலேயே அதிக வேகமாகவும், அதிக உயரமாகவும் பறக்கும் திறன் கொண்டது.
80 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு மூவாயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட குறித்த விமானம் கருப்பு வண்ணப் பூச்சுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது.
1960ஆம் ஆண்டு அமெரிக்காவின் உளவு விமானமான ‘யு-2’ என்ற விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து SR-71 Blackbird விமானத்தின் பயன்பாட்டை அமெரிக்கா நிறுத்தி வைத்தது.
எனினும், அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. மீண்டும் குறித்த விமானத்தினை தயாரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.