ஒருவருக்கு அமெரிக்க ஜனாதிபதியின் சிறந்த குடிமகனுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி, இரட்டை கோபுரம் உள்ளிட்ட 4 கட்டிடங்கள் மீது விமானங்களை மோதவிட்டு பயங்கவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
தெற்கு கோபுரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, இராணுவ அதிகாரியாக இருந்த ரிக் ரெஸ்கார்லா என்ற இங்கிலாந்துப் பிரஜை அங்கிருந்த ஆயிரக்கணக்கானவர்களை பத்திரமாக வெளியேற்றியிருந்தார்.
எனினும் இறுதியில் ரிக் ரெஸ்கார்லா கோபுர இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருந்தார்.
இந்தநிலையில், சுமார் 2,700 பேரை காப்பாற்றி வீரமரணமடைந்த ரிக் ரெஸ்கார்லாவின் செயலைப் பாராட்டும் விதமாக அவருக்கு ஜனாதிபதியின் சிறந்த குடிமகனுக்கான விருது அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் இந்த விருது வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.