கால்நடைகள் மற்றும் இறைச்சி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிம்பாவே அரசாங்கத்தினால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கால்நடைகளுக்கு பரவும் தொற்று நோய் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சிம்பாவே அரசாங்கத்தின் குறித்த தீர்மானம் காரணமாக தென்னாபிரிக்காவின் ஏற்றுமதி துறையில் கடும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.