உண்மையான புகைப்படங்களை இலங்கை ஊடகங்கள் வெளிப்படுத்த தவறிவிட்டதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித்.பி.பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஊடகங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதன் கடமைகளை சரிவர செய்வதில் தோல்வியுற்றுள்ளன என கூறினார்.
இலங்கையுடனான மிலேனியம் சவால்கள் நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்று அஜித்.பி.பெரேரா குற்றம் சாட்டினார்.
அத்தோடு தேர்தல் பணிகளில் அரசாங்கம் மும்முரமாக இருப்பதால் இந்த ஒப்பந்தம் குறித்து சரியான விடயங்களை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் குறித்த ஒப்பந்தத்தில் என்ன பிழை என்பதை எதிர்க்கட்சி தெரிவிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்த அஜித்.பி.பெரேரா, ஒப்பந்தத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால், அந்த உட்பிரிவுகளை மறுஆய்வு செய்து திருத்த அரசாங்கம் தயராக இருப்பதாகவும் கூறினார்.