தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடந்த கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க முனைந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லூர், கிட்டுப் பூங்காவில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டம் இன்று (புதன்கிழமை) மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வந்த ஒருவர் தகாத வர்த்தைகளைப் பேசி அங்கிருந்தவர்களை முகம்சுளிக்க வைத்தார். அவருடைய அநாகரிக செயற்பாட்டை அடுத்து அங்கிருந்த பொலிஸார் அவரை எச்சரித்துள்ளனர்.
இதன்போது பொலிஸாருடன் முரண்பட்ட அவர் கூட்டத்தில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றுள்ளார். அங்கிருந்து புறப்பட்ட அவரை கிட்டுப் பூங்காவிற்க்கு பின்புறமாக வைத்து வழிமறித்த வீதிப் போக்குவரத்து பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதன்போது குறித்த நபர் மதுபோதையில் இருப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக அவரைக் கைதுசெய்த பொலிஸார் அவரின் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.