முல்லைத்தீவு நகரிற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் ஒருபகுதியினர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றது.
இதன்போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, முல்லைத்தீவு நகரில் 975 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இன்று ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டனர்.
இதில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் வடக்குக் கிழக்கில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தேர்தல் முடியும் வரை எந்த போராட்டத்திலும் ஈடுபடுவதில்லை என்று தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அப்படிச்செய்தால் தென்பகுதியில் சிங்கள மக்களின் ஆதரவு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அதிகரித்துவிடும் என்பதால் அதனைத் தவிர்ப்பதாகவும் இன்றைய போராட்டம் அரசியல் கட்சி ஒன்றின் பின் புலத்திலேயே இடம்பெற்றதாகவும் குறறம்சாட்டினர்.