எதுவும் கிடையாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் ஆட்சி அமைப்பது அ.தி.மு.க. மட்டுமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றார். ஆக்கபூர்வமான கருத்துகளை கூறாமல் போராட்டங்களை தூண்டிவிட்டார்.
இதேவேளை, யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் ஆட்சிக்கு வருவது அ.தி.மு.க. மட்டும்தான். சிலர் அரசியலை தொழில் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அண்ணா கண்ட கனவை நனவாக்கவே அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர் உருவாக்கினார். எம்.ஜி.ஆர்.இனைப் போன்று யாரும் திரையுலகில் இருந்து வர முடியாது. வீட்டில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர் அல்ல எம்.ஜி.ஆர்.
பலமான கூட்டணியை அ.தி.மு.க. அமைத்துள்ளது. யாரும் அதனிடம் நெருங்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழகத்தில் ஆளுமையான சரியான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.