முகிலனுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. இதன்போது முகிலனுக்கு பிணை வழங்கிய நீதிபதி, சி.பி.சி.ஐ.டி. பொலிஸ் முன்பு 3 நாளுக்கு ஒரு முறை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தார்.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் இந்த வழக்கில் பிணை கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி முதல் ஜூலை 6 வரை தலைமைறைவாக இருந்தபோது எங்கு இருந்தீர்கள்? என்பதை தெரிவித்தால் பிணை வழங்க பரிசீலிப்பதாக முகிலனுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே முகிலனுக்கு பிணை வழங்க ஆட்சேபித்து அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு அளித்த பெண் தனியாக மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.