பலமாக வேண்டும் என்றால் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க வேண்டும் என பா.ஜா.க.வின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் இந்த விடயம் தொடர்பாக இன்று பதிவிட்டுள்ள அவர், “மஹிந்த ராஜபக்ஷவை இலங்கையின் பிரதமராக்க வேண்டும், இதனால் இலங்கை இந்தியாவுடனான உறவுகள் திடமானதாகவும், இரும்பு போன்றும் உறுதியாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றுள்ள நிலையில் முதலாவது அரசமுறை பயணமாக இந்தியா செல்லவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.